தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் இருக்கும் இடத்திற்கே தேடி சென்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் தவணையை 93.55 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 81.85 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2 கோடி பேர் தடுப்பூசியை திருத்திக் கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுபோன்ற மாதம் தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு மருத்துவத்துறையும், மற்ற சேவைத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி தடுக்கி விழும் இடமெல்லாம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.