Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண மண்டபத்தில்…’லிப்ட்’ அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலி… 2 பேர் படுகாயம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் மீது வழக்குபதிவு…. 3 பேர் கைது…!!!

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெத்திக்குப்பத்தில் ஒரு திருமண மண்டபம் அமைத்துள்ளது. இந்த திருமண மண்டபம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவருடைய மகள் ஜெயபிரியாவுக்கு சொந்தமானது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரண்டாவது மாடியில் இருக்கின்ற உணவு கூடத்திற்கு லிப்ட் மூலமாக கேட்டரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று லிப்ட் டின் இரும்பு கம்பி அறுந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில் கேட்டரிங் பணியாளராக பணிபுரிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வசித்த 11-ம் வகுப்பு மாணவன் சீத்தலின்(19) என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் உடன் பணியாற்றும் கேட்டரிங் பணியாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்த 23 வயதுடைய ஜெயராம், 21 வயதுடைய விக்னேஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் திருமண மண்டப உரிமையாளரும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுமான ஜெயபிரியா உட்பட மொத்தம் நான்கு பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் மேலாளரான 32 வயதுடைய திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் 40 வயதுடைய வெங்கடேஷ் மற்றும் லிப்ட் ஆப்பரேட்டரான புளியந்தோப்பில் வசித்த 22 வயதுடைய கக்கன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |