Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் தோத்துட்டேன்…. ADMK முன்னாள் கவுன்சிலரை கொல்ல சதி…. திமுக ஒன்றிய து.செயலாளர் உட்பட 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற திமுக ஒன்றிய துணைச் செயலாளர் உட்பட 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான  செந்தூர் பாண்டியனின் மகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி நான்காவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம் என்பவரின் அண்ணன் மகனான திருநாவுக்கரசு தோல்வி அடைந்திருக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் செந்தூர் பாண்டியனை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தூர் பாண்டியனை திமுக ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் காரை ஏற்றி கொலை செய்யும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செந்தூர் பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Categories

Tech |