Categories
தேசிய செய்திகள்

நாடே முடங்கும் அபாயம்….. கடும் விலைவாசி உயர்வு…. 25 முதல் 31-ம் தேதி வரை நாடுதழுவிய போராட்டம்…..!!!!!

நாட்டில் கடும் விலைவாசி உயர்வு காரணமாக 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள, நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மக்கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி வருகின்றது. இதனால் கோடிக்கணக்கானோர் கடும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரங்களை மேலும் அதிகப் படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை 70 சதவீதமும், காய்கறிகளின் விலை 20 சதவீதமும், சமையல் எண்ணெய் விலை 23 சதவீதமும், தானியங்களின் விலை 8 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் கோதுமையின் கடுமையான கட்டுப்பாடு ஆகியவை பணவீக்கத்தை அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாஜக தவிர பிற மாநில கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம். குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |