தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.