சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா காவல் நிலையம் அருகே வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பசுமாடு கடந்த 2 நாட்களாக சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத்துறையினர் சேற்றில் சிக்கிய பசுவை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.