கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாநிலங்களிலிருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் நாடு உள்ளது. தற்போது போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் உள்நாட்டு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்தது. இந்நிலையில் மாநிலங்களிலிருந்து கோதுமையை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.