இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக, ஆறாவது தடவையாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கியின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும், நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை அளிப்பதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நாளை இலங்கையின் 21-வது அரசியல் திருத்தத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கையையும் நாளை வெளியிட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.