பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் ஷெபாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் நேற்று காலை நேரத்தில் சுல்ஜீத் சிங் மற்றும் ரஞ்சீத் சிங் ஆகிய சீக்கியர்கள் இருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் படலால் பகுதியில் மசாலா கடைகள் நடத்தி வந்திருக்கிறார்கள். நேற்று காலை நேரத்தில் இருவரும் கடையில் இருந்திருக்கிறார்கள்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சீக்கியர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து பெஷாவர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை செயல்பட்டு வருகிறது.
Pakistan PM Shehbaz Sharif condemns the killing of Sikh citizens in Peshawar in Khyber Pakhtunkhwa.
"Have ordered a high level inquiry to ascertain facts. The killers will be arrested & meted out exemplary punishment. My most sincere sympathies to bereaved families," tweets PM pic.twitter.com/0jMN6RbCKe
— ANI (@ANI) May 15, 2022
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நாடு, இங்கு வாழக்கூடிய மக்கள் அனைவருக்கும் உரியது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்க உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவுடன் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.