Categories
மாநில செய்திகள்

சசிகலா யாரை குரங்கு என்று சொன்னாங்க?…. இதுதான் அடுத்த திட்டம்…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!

அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசுவது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்றும் கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் சசிகலா பேசி வந்தாலும் யாரையும் குறித்தும் பெரிய அளவிலான விமர்சனங்களை முன்வைக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாம் ஒன்றாக வேண்டும் என்றும் கழகம் வென்றாக வேண்டும் என்று சசிகலா ஆரம்பம் முதல் கூறி வருகிறார். இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காது கொடுத்து கேட்கவில்லை.

ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் சசிகலா தரப்பும் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் சசிகலா வரலாம், அவரது குடும்பத்தினர் ஒருவரும் உள்ளே வரக்கூடாது என்றும் டிடிவி தினகரன் கட்டாயமாக உள்ளே வர கூடாது என்று நிபந்தனை போடப்பட்டுள்ளது. இதற்கு சசிகலா தரப்பு சம்மதம் அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அந்த திருமண விழாவில் சசிகலா சொன்ன ஒரு குட்டி கதையால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

அதாவது “குரங்கு ஒன்று மாம்பழம் ஒன்றை சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் நமக்கு நிறைய பழங்கள் கிடைக்கும் என்றும் நம் இஷ்டத்துக்கு பழங்களை சாப்பிடலாம் என்று நினைத்து மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரை ஊற்றியது. அதன் பிறகு சிறிது காலம் ஆகியும் அந்த இடத்தில் செடி வளரவில்லை. இதனால் அவசர புத்தி கொண்ட அந்த குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கோட்டை எடுத்து பார்த்ததும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. மாங்கொட்டையை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் மாங்கொட்டை செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த குரங்கு மாங்கொட்டை எடுத்து தூர எறிந்துவிட்டு வருத்தப்பட்டது.

அந்த குரங்கின் ஆசை நியாயமானது தான், ஆனால் அவசர புத்தி நியாயமானது இல்லை. எனவே காலம் என்ற நியதி இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேற்றுவதில்லை, எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டுமென்றால் விதையை விதைத்து நீர் ஊற்றி சிலகாலம் பொறுமையாக காக்க வேண்டும் என்று கதையை விளக்கினார். இதனையடுத்து இந்த கதையில் சசிகலா அவசர குரங்கு என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று அரசியல் அரங்கில் கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை சொன்னாரா? அல்லது டிடிவி தினகரனை சொன்னாரா? என்று பெரும் பட்டி மன்றமே நடந்து கொண்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்றபோது முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமியிடமும், கட்சியை டிடிவி தினகரனிடமும் கொடுத்தார். அவசரப்பட்டு கொட்டையை தோண்டிப் பார்ப்பது யார் என்ற கேள்விக்கான பதிலை அறிந்தால் சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து விடலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |