ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில்,
தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தைகளின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதில் உத்தரவிட்டார். மொத்தம் 19 ஆப்ரிக்கன் சிறுத்தைகளை இந்திய காடுகளில் அனுமதிக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.