Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்த பிறகு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.

அதன்படி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்டிகர் மாநிலத்தில் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு புதிய அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சண்டிகர் நிர்வாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்ந்தால் மாநில அரசுகளும் அடுத்தடுத்து உயரத்த வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |