இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாககூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய – அந்நிய உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வழங்கலாம் என்று என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அண்மையில் வெளியிட்டது. அதன்படி கல்வி வரும் கல்வியாண்டில் (2022-2023) இந்தியாவில் உள்ள IITs, IIMs, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கூட்டுப்படிப்புகள், இரட்டை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்றை வழங்க முன்வருமாறு, UGC அழைப்பு விடுத்துள்ளது.