தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகப்பன். இவருடைய மகன் சங்கர் என்ற சன் கதிரவன்(40). இவர் கடந்த 2021_ ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தாலுக்கா மண்டபத்தில் வசித்த சேட்டு என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது.
மேலும் இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் பொருட்டு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையின் பேரில் சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனை அடுத்து சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.