உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபெர் ஸ்டீலி என்பவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புதினுக்கு என்ன நோய் என்பது சரியாக தெரியவில்லை.
ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்”. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்யாவில் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பச்சை ஆடையால் கால்களை மறைத்து இருந்தார் என்று புகைப்பட வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன.