Categories
தேசிய செய்திகள்

33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை

குஜராத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 17 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 14 பேரை விடுவித்தும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்பளித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் “குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பிரிவினர் குஜராத்தை விட்டு வெளியேறி மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் தங்கவேண்டும்.

மற்றொரு பிரிவினர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் தங்கவேண்டும். இவர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகும் நேரம் போக வாரத்திற்கு ஆறு மணி நேரம் சமூக சேவை ஆற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும், இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |