துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை பணிக்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். சென்னையில் 5, 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புள்ளி 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு துறைமுகம் – மதுரவாயில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான பணிக்கு முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலைக்கு மே 26-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உயர்மட்ட சாலை அமைந்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் துறைமுகம் மதுரவாயில் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.