Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 29.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

29-01-2020, தை 15, புதன்கிழமை,

சதுர்த்தி திதி பகல் 10.46 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.

பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு உத்திரட்டாதி.

அமிர்தயோகம் பகல் 12.13 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள்

காலை 06.00-07.00,

காலை 09.00-10.00,

மதியம் 1.30-2.00,

மாலை 04.00-05.00,

இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  29.01.2020

மேஷம் 

இன்று பிள்ளைகள்  மற்றும் உறவினர்கள் வகையில் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளால் பெரிய லாபத்தை ஈட்ட முடியும். தெய்வீக வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கும் தகுந்தார்போல் பதவி உயர்வுகள் வாய்க்கப் பெறும். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் அகலும். பயணங்களினால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல்நல பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் இருக்கும். பணவரவு  எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இருக்கும். கடன் தொல்லைகள் இன்று குறைந்து வீட்டின் தேவைகளும் நிவர்த்தி ஆகும். உத்தியோகஸ்தர்கள் உடன் இருப்பவர்களால் நல்ல பலனை அடைவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும்.

கடகம்

இன்று எடுக்கும் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும், உடன் பணி புரிபவர்கள் உதவியாக  இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் எந்த செயலிலும் தாமதமாகவே பலன் கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் தேவையற்ற வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருப்பது சிறந்தது. இன்று சுபகாரியங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

கன்னி 

இன்று இல்லத்தில் சுப செலவுகள் இருக்கும். உங்கள் பிள்ளைகள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உத்தியோகத்தர்களின் திறமைகளால் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி வெளியிலிருந்து கைக்கு வர வேண்டிய தொகை இன்று வந்துவிடும்.

துலாம்

இன்று வியாபாரம் தொடர்பாக பொருளாதார நெருக்கடிகள் அகலும். உறவினர்களால் நல்லபலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு இன்று உங்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகி எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம் 

இன்று தொழில் தொடர்பான பிரச்சினையால் மனதில் நிம்மதி குறைய வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வழியில் இல்லத்தில் ஆனந்தம் கூடும். உத்தியோகஸ்தர்கள் இன்று அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பெறக்கூடும். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி சுமூக உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுஷ்

உங்களுக்கு வரவிற்கு ஏற்றபடி செலவு இருக்கும். அசையும் அசையா சொத்து தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தாமதமாகவே நல்லபலன் உண்டாகும். தொழில் தொடர்பாக பெரியவர்களின் அறிமுகம் இன்று கிடைக்கும்.

மகரம் 

இன்று நீங்கள் எடுத்த காரியம் வெற்றியில் முடியும். இல்லத்தில்  பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் உங்கள் பெயர், செல்வம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்திருந்த உயர்வுகள் இன்று கிடைக்கும்.

கும்பம்

இன்று பொருளாதாரம் தொடர்பாக நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து எடுப்பது  நல்லது. விலையுயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு  சக ஊழியர்களில் ஒத்துழைப்பு இருந்தால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும்.  பிள்ளைகள் உங்களிடம் பாசத்துடன் இருப்பார்கள். தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் இல்லம் தேடிவரும். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன் கிடைக்கும். புதிய  பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |