அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சினம்பட்டி கிராமத்தில் இயற்கை அங்கன்வாடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜுனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார், உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அங்கன்வாடியை திறந்து வைத்துள்ளார்.
அதன் பின்னர் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 802 விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு வந்த பாரம்பரிய அரிசி ரகங்கள், நாட்டு காய்கறி விதை, சிறுதானியங்கள் உள்ளிட்ட விளை பொருட்கள் மதிப்பை உயர்த்தி நுகர்வோருக்கு வழங்க ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மானிய உதவியுடன் 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையை ஆய்வு செய்துள்ளார்.