Categories
உலக செய்திகள்

இலங்கையில் மோசமடையும் நிலை…. போராட்டக்களத்தில் கொடி விற்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்…!!!!

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் தேசியக்கொடியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றிருக்கிறார். மேலும், அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததோடு, அன்னிய செலவாணி கையிருப்பும் குறைந்தது.  இது வாடகை வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தெரிவித்ததாவது, நான் ஆட்டோ ஓட்டுனர் தான். ஆனால், பெட்ரோல் தட்டுப்பாடு, அரசாங்கம் விதித்த ஊரடங்கு போன்றவற்றால் போராட்டம் நடக்கும் இடங்களில் கொடி விற்பனை செய்து வருகிறேன்.

இதற்கு முன்பு, ஒவ்வொரு நாளும் 3000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தகுந்த வருமானம் கிடைக்கவில்லை. கொடி விற்பனை செய்தால் அதிக வருமானம் கிடைக்காது. எனினும், ஆட்டோ ஓட்டுவதை விட நன்றாக இருக்கிறது.

ஏனெனில், எரிவாயு, டீசல் தகுந்த அளவில் கிடைப்பதில்லை. உணவும் கிடைப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது? எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்று வேதனையுடன் கூறியிருக்கிறார். போராட்டம் நடத்தும் இலங்கை மக்கள் பரிதாபப்பட்டு இவர்களிடம் கொடிகளை வாங்குகிறார்கள்.

Categories

Tech |