உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. அந்த புத்தகத்தில் ஏராளமான மரங்கள், செடிகள் போன்றவைகளின் படங்கள் இருந்துள்ளது.
ஆனால் புத்தகத்தில் இருப்பது போன்ற மரங்கள் மற்றும் செடிகள் பூமியின் எந்த பகுதியிலும் இல்லை. அந்த புத்தகத்தின் எழுத்துக்கள் உலகின் எந்த மொழியுடனும் ஒத்துப் போகவில்லை. இதன் காரணமாக புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்தப் புத்தகத்தில் பச்சைக் நிறத்தில் இருக்கும் கடல், 2 சூரியன்கள், ஏராளமான சந்திரன்கள் மற்றும் பல கோள்களின் படங்களும் இருக்கிறது.
அதில் எண்களுக்கு பதிலாக ஒரு குறியீடை பயன்படுத்தியுள்ளனர். இந்த புத்தகத்தை 100 வருடங்களாக ஆய்வு செய்த பிறகு கடந்த 2016-ம் வருடம் ஒரு தகவலை வெளியிட்டனர். அதன்படி புத்தகத்தில் இருக்கும் செடிகள், கொடிகள் போன்றவைகள் ஏலியன்கள் வாழும் உலகத்தில் இருக்கின்றது எனவும், அந்த புத்தகத்தை ஏலியன்கள் எழுதி இருக்கலாம் எனவும் கூறினர்.