Categories
பல்சுவை

கனவில் தோன்றிய பெண்…. கண்களுக்கு தெரியாத மனைவி…. இப்படி கூட கல்யாணம் பண்ணுவாங்களா…?

உலகத்தில் இப்படி கூட கல்யாணம் பண்ணுவாங்களா என்பது இவரை பார்க்கும் போது தான் தெரிகிறது. அதாவது சார்லஸ் என்ற நபர் ஜெனிஃபர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்ட பெண்  யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டார். அதாவது சார்லஸ் பள்ளியில் படிக்கும் போது அவருடைய கனவில் ஜெனிபர் என்ற பெண்  தோன்றியுள்ளார். அந்தப் பெண்ணை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சார்லஸ் கற்பனையில் ஜெனிஃபர் இருப்பதாக நினைத்து தன்னுடைய 24 வயதில் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபரை தன்னுடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதுமட்டுமின்றி அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் தன்னுடன் ஜெனிஃபர் இருப்பதாக நினைத்துக் கொள்வார். அவர் ஓட்டலுக்கு செல்லும் போது 2 உணவுகளை ஆர்டர் செய்வார். அதன் பிறகு வீட்டில் உணவு சமைக்கும் போது கூட சார்லஸ் ஜெனிஃபருக்கும் சேர்த்து உணவு சமைப்பார். இதனையடுத்து சார்லஸ் 2 செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு ஜெனிஃபருக்கு மெசேஜ் செய்வதாகக் கூறி தனக்கு தானே மெசேஜ் செய்து கொள்வார். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் சார்லஸ் அரசாங்கத்திடம் 48 முறை திருமண சான்றிதழ் கேட்டு ‌விண்ணப்பித்துள்ளார். ஆனால் அரசாங்கம் சார்லசுக்கு திருமண சான்றிதழ் கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர்.

Categories

Tech |