Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழையால்… “தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு”… கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை…!!!

ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கன மழை பெய்து வருகின்றன. இதனால் இங்குள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகின்றன. நேற்று முன்தினம் வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகில் உள்ள பெத்தகுள்ளு, தட்டனப்பள்ளி, முத்தாலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு நேற்று முன்தினம் வருவாய் துறை சார்பாக தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் அபாயத்தை நினைக்காமல் ஆற்றை கடக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறுகின்ற தண்ணீரில் ரசாயன கலவை கழிவு கலந்து வருவதால் நுரை பொங்கி வருகின்றன. தொடர்ந்து ஆறு தினங்களாக ஆற்றில் ரசாயன நுரை மழைபோல் குவிகின்றது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |