Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு…. பிடிப்பட்ட மர்மநபர்….அமெரிக்காவில் பரப்பரப்பு…!!

கலிபோர்னியா மாகாணத்தில் சர்ச் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து தென்கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகுனா வூட்ஸ் பகுதியில் ஜெனீவா பிரஸ்பைடிரியன் என்ற சர்ச் ஒன்று  அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.  இந்த சம்பவம் தொடர்பாக  ஒருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து ஆயுதம் ஒன்றை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
முன்னதாக நேற்று முன்தினம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |