இதையடுத்து ‘டகால்டி’ திரைப்படம் திட்டமிட்டபடி சொன்ன தேதியில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’ படமும் அதே நாளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
அதன்படி, ‘சர்வர் சுந்தரம்’ படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், வழி விடுகிறோம் வாருங்கள் ‘டகால்டி’ படம் வெற்றி பெற வாழ்த்துகள் எனக் கூறி போஸ்டரும் வெளியிட்டுள்ளனர்.
இதன்மூலம் சந்தானம் vs சந்தானம் என அவரே தனது படங்களுக்கு போட்டியாக இருந்தது தவிர்க்கப்பட்டிருப்பதுடன், இரு படத்தின் தயாரிப்பாளர்களும் வசூலில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பலன் அடைவார்கள் என்று விவரமரிந்தவர்கள் கூறுகின்றனர்.
2015-ஆம் ஆண்டு தொடங்கிய ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய், கிடப்பில் இருந்த இந்தப் படம் தற்போது புத்துயிர் பெற்று ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் சந்தானத்தின் மற்றொரு படமான ‘டகால்டி’ ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘சர்வர் சுந்தரம்’ வழிவிட்டு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்துக்கு இசை – சந்தோஷ் நாரயணன். கெனன்யா பிலிம்ஸ் படத்தை தயாரிக்க, ஆனந்த் பால்கி படத்தை இயக்கியுள்ளார்.