Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“4 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி” தொடங்கி வைக்கும் முதலமைச்சர்…. தீவிரமாக நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகள்….!!!!

முதலமைச்சரின் வருகையை ஒட்டி சாலையோரம் இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்றினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாட்கள்  மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் சாலையோரம் இருக்கும்  மரங்கள் குறித்து தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை  உள்ளிட்ட  பகுதிகளில் சாலையோரங்களில் மரங்கள் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து   கொணவக்கரை, ஜக்கனாரை,குறிஞ்சபனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் இருந்த மரம் மற்றும் செடிகளை அதிகாரிகள்  அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |