மர்மமான முறையில் இறந்த நடிகை சஹானா மரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
சஹானாவின் கணவரான சஜத் அடிக்கடி குடித்துவிட்டு சஹானாவிடம் பிரச்சனை செய்ததாகவும் அவரை கொடுமை செய்ததாகவும் சஹானாவின் அம்மா கூறியிருந்தார். இதையடுத்து ஆதாரங்களைத் திரட்டுவதற்காக போலீசார் சஜத்தை அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது வீட்டில் கஞ்சா, எம்டிஎம்ஏ, எல்எஸ்டி ஆகியவை இருந்தது தெரியவந்தது. மேலும் சஜத் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்தது.
இந்நிலையில் சஹானா தூக்கிட்டு கொண்டதாக சஜத் காட்டிய பிளாஸ்டிக் ரோப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அந்த மெல்லிய ரோப்பில் ஜன்னல் கம்பியில் மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா என விசாரணை செய்கின்றார்கள். தற்பொழுது சஜத் பயன்படுத்திய போதை பொருட்களின் தன்மையை குறித்தும் தடவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றார்கள். மேலும் சஹானா மற்றும் சஜத் குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்த இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.