Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பொது மக்கள் கவனத்திற்கு” அதிகரிக்கும் கறிக்கோழியின் விலை…. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!

கறிக்கோழியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கறிக்கோழி பண்ணைகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வுக்கு  ஏற்ப  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால் கடந்த 5-ஆம்  தேதி   ஒரு கிலோ கறிக்கோழி 103 ருபாயாகவும்,  7-ஆம் தேதி 120 ருபாயாகவும், 8-ஆம்  தேதி 122  ரூபாயாகவும், 10-ஆம்  தேதி 127 ரூபாயாகவும் , தற்போது 130 ரூபாய்க்கும்  விற்பனை நடைபெறுகிறது. மேலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை காலம் என்பதால் இறைச்சியின்  நுகர்வு அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |