ஹைதராபாத்தில் வசிக்கும் ரஞ்சிதா-விக்ரம் தம்பதிகளின் மகன் ரூப் அரோனா (8). இந்த சிறுவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால் சிறுவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்துள்ளது. அந்த நோயின் தாக்கத்தால் சிறுவனின் உடலில் ஹீமோகுளோபின் குறைந்துள்ளது. இந்த சிறுவன் சிறிது நாட்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் ரூப்பின் பெற்றோர் போலீஸ் கமிஷனரிடம் தன்னுடைய மகனின் ஆசையை பற்றியும், அவருக்கு இருக்கும் நோயைப் பற்றியும் கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த போலீஸ் கமிஷனர் சிறுவனை ஒரு நாள் மட்டும் கமிஷனராக மாற்றினார். அந்த ஒரு நாளில் சிறுவன் எல்லா files -லும் கையெழுத்து போட்டார். மேலும் சிறுவனின் ஆசையை போலீஸ் கமிஷனர் நிறைவேற்றி விட்டார்.