நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையவே மறையாது பலநாடுகள் உள்ளது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லாங் நைட் என அழைக்கப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்று விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசி சூரியன் மறைவு மே 13ஆம் தேதி நிகழ்ந்ததாகவும், பூமியின் மற்ற பகுதியில் ஒரு நாள் என்பது இரவு பகல் சேர்ந்ததுதான். ஆனால் அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் 6 மாதங்களுக்கு ஒருமுறை தான். இதற்கு காரணம் பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பது தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.