Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் ஒரு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |