Categories
மாநில செய்திகள்

2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குவளை கண்டுபிடிப்பு…… வெளிவரும் தமிழர் கலைநயம்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடகரையில் அமைந்துள்ள உச்சி மேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சுடுமண் விளக்கு, யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்களும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காலத்தால் அழியாத கலைநயமிக்க கண்கவர் குவளை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைபாடுகளுடன் கூடிய இந்த குவளையை எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அழகிய வேலைபாடுகளுடன் கூடிய  சுடுமண் குவளை தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்க பொருள்களை உபயோகம் செய்துள்ளனர் என்பதை தெரியப்படுத்துகிறது.

Categories

Tech |