Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு 2022: 45 நாட்களுக்கு பிறகு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் ஜூன் 27ம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு 45 நாட்களுக்கு பிறகு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. விடை குறிப்பை மறு ஆய்வு செய்தபின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்வு பட்டியலை ஜூலை இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

 

Categories

Tech |