உலகிலுள்ள அனைத்து வாகனங்களும் பொதுவாக முன்னோக்கி தான் செல்லும். ஆனால் ஒருவர் கண்டுபிடித்த மினி டிரக் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கிச் சென்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கார் பந்தய வீரர் தன்னுடைய அப்பா வாங்கிய மினி டிரக்கை பின்னோக்கி செல்லுமாறு மாற்றி அமைத்துள்ளார். இதற்காக மினி டிரக்கின் front and back -ஐ மட்டும் மாற்றியுள்ளார்.
இவர் மற்றவர்களைவிட தன்னுடைய வாகனம் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே பின்னோக்கி செல்லுமாறு வடிவமைத்துள்ளார். இந்நிலையில் பின்னோக்கி செல்லும் மினி டிரக் பலபேருக்கு பிடித்ததால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், இந்த டிரக்கை மட்டும் தந்து விடுங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் தன்னுடைய தந்தையின் ஞாபகமாக இருக்கும் அந்த டிரக்கை விற்க முடியாது என அவர் கூறிவிட்டார்.