கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று பதட்டம் காணப்படும்.
தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் அமைதிப்பெறும். பணியில் மந்தநிலை காணப்படும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. சிக்கலின்றி பணியாற்ற திட்டமிடுதல் அவசியமாகும். குழப்பமான மனநிலை உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இதனால் இருவருக்குமிடையே மோதல் காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். இதனால் உங்களின் கடன் தொகை அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்காது. சோர்வு காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.