இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய உரையில், “பிரதமர் பதவி வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து, பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அதிபர் எனக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும். தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.
எரிவாயு மற்றும் மண்ணெண்ணை அவசர தேவையாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டாலர் கையிருப்பில் தட்டுப்பாடு உள்ளது. இன்னும் ஒரு நாளைக்கு தான் பெட்ரோல் கையிருப்பு நம்மிடம் உள்ளது. நேற்று இலங்கை வந்தடைந்த டீசலால், டீசல் பற்றாக்குறை ஓரளவிற்கு தீர்க்கப்படும்” என்று அவர் பேசினார்.