Categories
உலக செய்திகள்

பால் பவுடருக்கு தட்டுப்பாடு…. தாய்ப்பாலை விற்கும் தாய்…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!!

உலகம் முழுவதும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பால் பவுடரை பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பல குடும்பங்களும் தங்களுடைய கைக் குழந்தைகளுக்கு பால் பவுடர் தான் உணவாகக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு திடீரென்று பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக பால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாலும்,ஆலையை மூடியதும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் யூடாவில் வசிக்கும் அலிசா சிட்டி என்ற பெண் தன்னுடைய தாய்ப்பாலை விற்று பல குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறார். அவர் தனக்கு சுரக்கும் தாய்ப்பாலை கெடாமல் ஃப்ரீசரில் சேமித்து வைத்து தேவைப்படும்போது அளித்து வருகிறார். ஒரு அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிகராக தாய்ப்பாலை விற்பதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |