Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதார்களுக்கு குட்நியூஸ்….. இனி பயனாளர்களை ஏமாற்ற முடியாது…..!!!!

ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரசு தரப்பிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு விநியோக சேவையில் எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தரப்பில் இருந்து பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பொது மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதன் மூலமாக மட்டுமே உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் போது நிகழும் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |