நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்களை அள்ளும் பணி நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தன.ர் அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு நின்றிருந்த மூன்று லாரிகள் 2 பொக்லைன் இயந்திரங்களும் பாறையில் சிக்கி நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் குழிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும் அந்தத் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்குவாரியில் இருந்து நான்காவதாக மீட்கப்பட்ட நபர் முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் நாங்குநேரி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் ஆவார். இவரும் உயிரிழக்க விபத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.