கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது.
இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. கோடை விழாவில் மே 24 முதல் 29ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடைபெறும் என்று திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.