பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பூமிக்கடியில் இருக்கும் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவர் செய்த வேலையால் அவருடைய குடும்பத்தின் வறுமை குறையவில்லை. ஆனால் திடீரென அவருடைய 3 வயது மகனால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரனாக மாறிவிட்டார். அதாவது அவருடைய மகன் பூமிக்கடியில் இருக்கும் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிலிருந்து சத்தம் கேட்டுள்ளது.
அப்போது சத்தம் கேட்ட இடத்தில் தோண்டிப் பார்த்ததில் ஒரு தங்க டாலர் கிடைத்துள்ளது. அந்த தங்க டாலரை ஆராய்ச்சிக்கு கொடுத்த போது 500 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பணக்காரர்கள் அந்த டாலரை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்க டாலரை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதற்காக அந்த தங்க டாலரை கண்டு பிடித்த நபருக்கு 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாயாகும்.