தமிழகத்தில் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. அதன்படி சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா,குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.