Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதை செய்யாவிட்டால் 11 வது தவணை பணம் கிடைக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.

11 தவணை பணமானது ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வரும் எனவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் பணம் வந்து சேரவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளின் ஒப்புதலும் அவசியமாகும். சில மாநில அரசுகள் 11வது தவணை பணத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. pm-kisan இணையதளத்தில் உள்ள நிலையை சரி பார்க்கும் பொழுது “Waiting For Approval By State” என்று எழுதப்பட்டிருப்பதை கண்டால் உங்கள் தவணைக்கான ஒப்புதல் மாநில அரசிடமிருந்து வரவில்லை என்பது அர்த்தம்.

உங்களுடைய கணக்கில் Request for Transfer என்று எழுதப்பட்டிருந்தால் பயனாளிகளின் தரவுகள் மாநில அரசால் சரிபார்க்கப்பட்டு பணத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதேபோல FTO (Fund Transfer Order) என்று எழுதப்பட்டிருந்தால் பேமெண்ட் கன்பர்மேஷனில் உள்ளதாக அர்த்தம். இப்படி இருந்தால் நிதி பரிமாற்ற செயல்பட தொடங்கி விட்டது என்று அர்த்தம். அப்போது சில நாட்களில் தொகை உங்கள் கணக்கில் வந்து சேரும்

Categories

Tech |