Categories
பல்சுவை

என்ன? துப்பாக்கியால் சுடுவதும்…. இந்த எறும்பு கடிப்பதும் ஒன்றா….? எதற்காக இப்படி சொல்கிறார்கள் தெரியுமா…?

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சட்டாரி வாவி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தன்னை ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு போட்டியை நடத்துவார்கள். அது என்ன போட்டி என்றால் புல்லட் எறும்பு கடிப்பதால் ஏற்படும் வலியை யார் தாங்குகிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் என்பார்கள். இந்நிலையில் புல்லட் எறும்பு என்பது மிகவும் மோசமான ஒரு உயிரினமாகும். ஏனெனில் ஒரு துப்பாக்கியால் சுடும் போது எவ்வளவு வலி ஏற்படுகிறதோ அதே போன்று புல்லட் எறும்பு கடிக்கும் போதும் வலி ஏற்படும். இதற்கு காரணம் புல்லட்டின் கொடுக்கில் பொனிரா டாக்சின் என்ற விஷம் இருக்கும்.

அந்த எறும்பு கடிக்கும் போது விஷமானது நம் உடம்புக்குள் செல்வதால் தான் துப்பாக்கியால் சுடும் போது ஏற்படும் வலியை போன்று வலிக்கிறது. அந்தப் பழங்குடியின மக்கள் புல்லட் எறும்புகளைப் பிடித்து அதை ஒரு மூலிகை கலந்த தண்ணீரில் போடுவார்கள். இதனால் புல்லட் எறும்புகள் மயங்கி விடும். அதன் பிறகு அந்த எறும்புகளை ஒரு தென்னை ஓலையில் வைத்து தைத்து அதை ஒரு கை உறை போன்று மாற்றுவார்கள். அந்த கையுறைகளை ஒரு ஆணின் கையில் அணிந்து விடுவார்கள். அதன் பிறகு புல்லட் எறும்பு கடிக்கும் போது அதன் வலியை யார் தாங்கிகிறார்களோ அவர்கள்தான் ஒரு சிறந்த ஆண் மகனாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Categories

Tech |