Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் மிகவும் சிரமப்படுகிறோம். இதனால் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்துகளை பராமரித்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |