சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வேலிபட்டியில் கூலித் தொழிலாளியான சின்னகருப்பு(19) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னகருப்புக்கும் அதே பகுதியில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி சின்ன கருப்பு சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்ன கருப்புவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.