ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். டெல்லி, மும்பை, சென்னையில் உள்பட மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த பரபரப்பான சூழலில், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில் கூலாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வழக்கு தொடர்பாக எத்தனை முறை தோதனை நடந்தது என்று எனக்கே நினைவில்லை. இதை பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.