பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தருண். இவருடைய பெற்றோர்கள் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த தருண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவர் எழுதிய கடிதத்தில் தனது இறப்பிலாவது தாய் தந்தை ஒன்று சேர வேண்டும் என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.