Categories
உலக செய்திகள்

புது பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே… இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்….!!!!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே சென்ற 9ஆம் தேதி பதவி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது.
இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் பிரதமராக6வது முறையாக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரம சிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும், அரசியல் குழப்பத்துக்கும் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றமானது கூடுகிறது. அந்நாட்டில் புது பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது குறிப்பிடத்தக்கது. இதுமிகவும் முக்க்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

Categories

Tech |