Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி நிலுவைத் தொகை வருமா வராதா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17% லிருந்து 28% உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் 31% உயர்த்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 3% அதிகரித்து தற்போது 34% உள்ளது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வுக்கான 18 மாத நிலுவை தொகையை வழங்கப்படவில்லை. இந்த 18 மாத நிலுவை தொகையை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அகவிலைப்படி நிவாரணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதியமைச்சகம் நிராகரித்து விட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் மற்றும் டிஏ நிலுவை தொகை ரூ.34 ஆயிரம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓய்வூதிய விதிகளை மறு ஆய்வு செய்வதற்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிலைக்குழுவின் 32 வது கூட்டத்தில் டிஏ மற்றும் டிஆர் நிலுவை தொகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியது, ஓய்வுத்தாரர்களின் நலனை கவனித்து, அவர்களின் குறைகளை பல நிலைகளில் நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |